Pages

Saturday, 2 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 234


According to a lonely lady’s version, “Only the thoughtless person says that only the sun setting reddish-sky period is evening. It is not so. The early morning when the cock crows (image) and day-time are also evening to the ladies whose mate is not along with her”.

This is a poem compiled by MILAI-PERUN-KANDAN
2nd century B.C.

234. முல்லை

சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் (படம்)
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை துணை இலோர்க்கே.

பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மிளைப்பெருங் கந்தன் பாடல்

வெளிச்சம் குறைந்த பொழுது வானத்தைச் சிவக்க வைத்து, முல்லைப்பூ மலரும் காலத்தை மட்டும் மாலை என்று சொல்பவர்கள் அறிவு மயங்கியவர்கள். உண்மையில் துணை இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு பொழுது விடியக் கோழி கூவும் விடியலும் மாலை, பகல் பொழுதும் மாலை. 

No comments:

Post a Comment