Pages

Saturday, 2 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 233


She wears several small bangles in her hand. Her village peoples enjoy their wealth only the remaining portion after endowed to honorable men. The remaining portion also will be eaten after serving food to others. The pit dug by playing children in street corner will be seen filled with flowers KONTRAI. It resembles gold jewelry opened in a saved box. (Image)
(Please drive the chariot to her residence).   

This is a poem compiled by PEYAN
2nd century B.C.

233. முல்லை

கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன (படம்) 
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.


பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

பேயன் பாடல்

வள் தன் கையில் சிறுசிறு வளையல்களை நிறைய அணிந்திருப்பாள். உயர்ந்த பெருமக்களுக்கு தம் செல்வத்தை நீரோடு சேர்த்துத் தாரை வார்த்துக் கொடுத்தது போக எஞ்சிய மிச்சத்த்தை எல்லாருக்கும் சோறாக வரையறை இல்லாமல் வழங்கும் ஊர் அவளது ஊர். அந்த ஊர் புறவு (புல்வெளி) நிலத்தில் உள்ளது. வழியில் பாதை பிரியும் கவலை முடுக்கில் (சிறுவர்கள் விளையாடுவதற்குப் பறித்த) சிறு குழியில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து மூடிக் கிடக்கும். அது செல்வர் தம் பொன்னணிப் பெட்டியைத் திறந்து வைத்திருப்பது போல் தோன்றும். (தேரை அங்குச் செலுத்துக என்று தலைவன் தன் பாகனுக்கு அறிவுறுத்துகிறான்)

No comments:

Post a Comment