Pages

Friday, 1 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 231


Though we are living in the same village he never appears in our street. Suppose he comes to our street he did not hug me. He seems like fire cocking food in neighbor’s house (not food) without use. My passion of lust fell on him as a shooting arrow (image) fell in a distance that never returns.

This is a poem compiled by PERUN-KAGUNKO, a Chera King, whose poems on love in arid track are famous.
2nd century B.C.

231. மருதம்

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் (படம்) சென்று சேண் படவே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

வர் நாம் வாழும் அதே ஊரில் வாழ்ந்திருந்தும் நம் தெருப்பக்கம் வருவதில்லை. அப்படியே ஒருவேளை தெருப்பக்கம் வந்தாலும் என் உளமாரத் தழுவி முயங்குவதில்லை. அடுத்த வீட்டில் அடுப்பு எரிக்கும் புகை தெரிகிறது. (அந்தச் சோறு நமக்குக் கிடைப்பதில்லை) அதுபோல நாம் கண்ணால் காண்பதற்குத்தான் அவர் இருக்கிறார். வில் எய்த அம்பு தொலைவிடம் சென்று விழுந்துவிடுவது போல என் காமம் அவரிடம் சென்று விழுந்துவிடுகிறது. – இப்படித் தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

No comments:

Post a Comment