Pages

Friday, 1 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 230


The lady expresses her longing with these words.
He who took me has not decided to come and meet me. I think, suppose, I would have done some mistake without my knowledge in my earnest desire. He may come as a matter of fishing SURAA (shark) (image).     

This is a poem compiled by ARIVUDAI NAMBI, (a Pandiya King)
2nd century B.C.

230. நெய்தல்

அம்ம வாழி, தோழி! கொண்கன்
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச் சுறா (படம்) வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.

வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது.

அறிவுடை நம்பி பாடல்

தோழி, என்னைக் கொண்ட கொண்கன் துணிவு இல்லாதவன். நான் என் அறியாமையால் பெருமனம் கொண்டு அவன் நோகும்படி ஏதாவது செய்துவிட்டேன் போலும். சுறாமீன் மேயும் வழியில் அவன் (அதனைப் பிடிக்கவாவது) சில நாளேனும் வந்து செல்லக் கூடாதா? – தலைவியின் ஏக்கம். 

No comments:

Post a Comment