This
is a poem compiled by MOTHAASANAAR
2nd century B.C.
229.
பாலை
இவன்
இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்
தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற்
செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில்
சிறு செரு உறுப மன்னோ!
நல்லை
மன்றம்ம பாலே மெல் இயல்
துணை
மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம்
மகிழ் இயற்கை காட்டியோயே.
இடைச்
சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது.
மோதாசனார்
பாடல்
ஐம்பால் = பெண்ணின் தலைமுடியாகிய கூந்தல்
ஓரி = ஆணின் தலைமுடி
சின்ன
போர். காரணம் இல்லாமல் நிகழும் போர். மணம் கமழும் போர். மகிழ்ச்சிப் போர். காதலில்
இயற்கையாக நிகழும் போர். (இருவரும் சேர்ந்து ஒடிப்போகும்
நிலையில் வழியில் காட்டில் நிகழ்கிறது) இவன் இவளது முடியைப் பற்றுகிறான். இவள்
இவனது முடியைப் பற்றுகிறாள். (இருவருக்கும் வலிக்கிறது.)
இவளை வளர்த்த செவிலியர் தடுக்கின்றனர். இவனும் இவளும் விட்டபாடில்லை. இது நல்ல போர்.
(கருத்து ஒருமித்த இந்தப் போர் உண்மையில் கட்டி அணைக்கும்
போர்.) இவர்களது ஊழ்வினை நன்று. வாழ்க இவர்களின் மகிழ்வு. – கண்டோர் இவ்வாறு
பேசிக்கொள்கின்றனர்.

No comments:
Post a Comment