செடியை வளைத்து மண்ணில் ஊன்றி வேர் விட்டதும்
தாய்க் கிளையிலிருந்து வெட்டிவிடுதலைப் பதியம் போடுதல் என்கிறோம்.
இறைவன் நம்மை இவ்வாறு
பதியவைக்கிறான் என்பது சைவசித்தாந்தக் கோட்பாடு.
பதிய வைப்பவன் பதி.
பதியம் வைப்பவன் பதி.
வடமொழியில் பதி என்னும் சொல் கணவனைக் குறிக்கும்.
ஒருத்தியைக் கொண்டவனைப் பழந்தமிழ் ‘கொண்கன்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.
பதிவாக்கிக் கொண்டவன் பதி.
எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் பதி இறைவன்.
சைவசித்தாந்தம் இவனைச் சிவன் என்று குறிப்பிடுகிறது.
உயர்ந்த மெய்யியல் உண்மைகளை மிக எளிய தமிழில் எழுதியுள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்.
ReplyDeleteஉயர்ந்த உள்ளம் தரும் இது போன்ற ஊக்கத்தால் புத்துணர்ச்சி பெறுகிறேன்
Delete