Pages

Monday, 4 August 2014

பதி பசு பாசம் - சைவசித்தாந்தம் – விளக்கம்

சைவ சித்தாந்தம்
பதி பசு பாசம்
சிவமனக் கோட்பாட்டைச் சைவ சித்தாந்தம் என்கிறோம்.

மனத்தின் சித்து விளையாட்டு முடிவே சித்தாந்தம்.

பசுமை+கிளி=பைங்கிளி எனப் புணர்ந்தது போன்று 
சிவம்+சித்தாந்தம்=சைவசித்தாந்தம் ஆயிற்று.

பதி பசு பாசம் என்பன இக் கோட்பாட்டின் மும்முனைகள்.
  1. பதி என்பது நமக்குள் பதிவாகியிருக்கும் செம்மைநிலை; அதாவது சிவநிலை.
  2. பசு என்பது உயிரும் உடலும் ஒன்றியிருக்கும் ஓர் உயிரி.
  3. பாசம் என்பது உயிரியிடம் பதிவாகியுள்ள ஆசைக்கயிறு.
மேய்ப்பவன் (பசுவுக்கு உரியவனாகிய பதி) பசுவை (உயிரியை) ஒரு கயிற்றால் (பாசத்தால்) கட்டி வைத்திருக்கிறான். பாசத்தின் நீளத்தைப் பொறுத்து அது மேயுமிடம் விரியும். பாசம் மேய்ப்பவனுடையதாகவும் உயிரியினுடையதாகவும் இருக்கும். பாசக்கயிற்றின் ஒரு முனை பசுவின் கழுத்திலும் மற்றொரு முனை பதியின் கையிலும் உள்ளது. தளைந்து வைத்திருக்கும் முடிச்சு அவிழ்ந்துவிட்டால் உயிர் விலகி உடல் அழுகிவிடும்.

13ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞானபோதம், பின்னர் அதன் விளக்கமாகத் தோன்றிய சிவஞான சித்தியார் முதலான நூல்கள் இவற்றை விளக்குகின்றன.

இவை அவரவர் பாச அறிவுக்கு ஏற்ப விரியும்.

No comments:

Post a Comment