![]() |
| வேதாந்தம் அத்துவைதம் துவைதம் விசிட்டாத்துவைதம் |
அத்துவைதம் துவைதம் விசிட்டாத்துவைதம்
என்பன அவை. இந்தக்
கோட்பாடுகளை விதைத்தவர் மூவர்.
- 1. அத்துவைதம் - ஊர் காலடி (கேரளா) - ஆதிசங்கரர் – ஆண்டு 400-450
- 2. விசிட்டாத்துவைதம் – ஊர் ஸ்ரீபெரும்புதூர் (தமிழ்நாடு) - இராமானுஜர் ஆண்டு 1017-1137
- 3. துவைதம் – ஊர் உடுப்பி (கர்நாடகா) - மத்துவர் – ஆண்டு 1193(அ)1238-1317
இவர்கள் என்ன கண்டார்கள்?
- ஆன்மா = ஆ = பசு = ஆன்மா (ஆன்பால், ஆவின்பால் என்பது போன்ற புணர்ச்சி) – தமிழ்
- ஆத்மா = வடசொல் (ஆத்மீ என்பது போன்றது)
- ஒருமை (தமிழ்) = அத்துவைதம் (வடசொல்) இரண்டற்றது = அ+த்வைதம் = பரமாத்மாவுக்குள் சீவாத்மா உள்ளது. சீவாத்மாவுக்குள் பரமாத்மா உள்ளது, இரண்டும் வெவ்வேறாக ஒன்றுக்குள் ஒன்று உள்ளது.
- இருமை (தமிழ்) = துவைதம் (வடசொல்) = த்வா = தோ = இரண்டு. பரமாத்மா நம்மைக் காக்கிறார். நாம் பரமாத்மாவைப் போற்றுகிறோம். பரமாத்மாவும் சீவாதமாவும் வெவ்வேறு நிலை.
- சீர்மை (தமிழ்) = விசிட்டாத்துவைதம் (வடசொல்) = வி என்பது சீர் பெற்றுள்ள சிறப்பைக் குறிக்கும். ஒப்புநோக்குக – விநாயகர் என்னும் சொல் சிறந்த நாயகரைக் குறிக்கும். = விசிஷ்டம்+அத்துவைதம் = விசேஷ அத்துவைதம். நாமும் பரமாத்மாவும் ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறோம்.
வேதாத்திரி மகரிசி
இவற்றை
எளிமையான
உவமைகளால்
விளக்குகிறார்.
- இருமை – பசியோடு நாம் (1), உணவு (2)
- ஒருமை – உணவை உண்டோம். வயிற்றுக்குள் உணவு
- சீர்மை – உணவு செரிமானம் ஆகி வலிமையாக மாறிய நிலை


No comments:
Post a Comment