Pages

Friday, 29 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 317


317. குறிஞ்சி

புரி மட மரையான் கரு நரை நல் ஏறு (jபடம்)
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

மதுரைக் கண்டரதத்தன்

திருகிய கொம்புகளையும், கருநரை நிறத்தையும் உடைய ஆண் மரையான் புளிப்புச் சுவை கொண்ட நெல்லிக் காய்களைத் தின்றுவிட்டு அருகிலுள்ள மாம்பூக்கள் உதிரும் வண்ணம் பெருமூச்சு விட்டபடி மலைச்சுனையில் உள்ள நீரைப் பருகும் நாட்டை உடையவன் அவன். வடபுல வாடை மழை அழிந்த காலத்தில் தென்புலம் நோக்கி வரும் பனிக்காலத்தில் அவன் நம்மை விட்டுவிட்டு இருப்பானோ? (வந்துவிடுவான்)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment