Pages

Monday, 25 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 296


296. நெய்தல்

அம்ம வாழி தோழி! புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி ''தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?'' என்றனை துணிந்தே.

காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பெரும்பாக்கன் பாடல்

தோழி, துறைவனைக் காணும்பொழுது - தொடியோள் (தொடி கழன்று) இத்தன்மையினள் ஆகும்படி துறத்தல் தகுமோ – என்று கடிந்துகொள்ளாதே.
புன்னை மரக் கிளையில் இருந்த நாரை உப்பங்கழியில் இருக்கும் மீன் உண்டு சலித்துவிட்டால் நெய்தல் பூத்திருக்கும் வயலிலுள்ள நெல்லங் கதிர்களை மேய விரும்பும் துறைவன் அவன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில் இதன் செய்தி  

No comments:

Post a Comment