Pages

Thursday, 31 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 227


(Her friend hints her lady to join with her lover.)
It seems that his chariot would have come here. Bangle like rim of the wheel impression that cuts the round shaped leaves of NEYTHAL plant (image) seems in the littoral land.

This is a poem compiled by OTHA GNAANIYAR 
2nd century B.C.

227. நெய்தல்

பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் (படம் - நெய்தல்) உடைத்து, இவண்
தேரோன் போகிய கானலானே.

சிறைப்புறம்.

ஓத ஞானி பாடல்


கையில் உள்ள பூண் வளைவு போல் இரும்புக் கட்டுப் போட்ட அவன் தேர்ச்சக்கரம் வட்டமான நெய்தல் இலைகளை வட்டிக்கொண்டு சென்ற பதிவு இந்தக் கானலில் காணப்படுகிறதே. இவ்வாறு தோழி தலைவிஇயிடம் கூறுகிறாள். (அவனிடம் நீ செல்ல்லாம் என்பது கருத்து)

No comments:

Post a Comment