Pages

Thursday, 31 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 226


My eyes like flower, shoulder like bamboo and forehead like crescent – all are beautiful before I smile with him, the Man of littoral land where flower THAAZAI resembles bird KURUDU (image).    

This is a poem compiled by SENTHAM POOTHAN, a writer in Madurai village.
2nd century B.C.

226. நெய்தல்

பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி தோழி! அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு (படம்) என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் பாடல்

பூப் போன்ற கண்ணும், மூங்கில் பொன்ற தோளும், பிறை போன்ற நெற்றியும் மிகவும் நல்லவை. எப்போது? தாழம்பூ குருகுப் பறவை போல் தோன்றும் சேர்ப்பனைப் பார்த்து சிரிப்பதற்கு முன்பு.

இப்போது மணக்கும் கவலையால் அவை பொலிவை இழந்துவிட்டன, என்கிறாள் தலைவி. 

No comments:

Post a Comment