Pages

Thursday, 31 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 225


He is a Man of the country where cow eats the millet that placed in sun to dry, while feeding its calf.
The friend-maid informs him (hero) that her (heroine) fertile hair of mattress is for him if he behaves with gratitude that not of a king who forgets the timely help of a person while he was losing his crown.  

This is a poem compiled by KAPILAR
2nd century B.C.

225. குறிஞ்சி

கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.

வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது.

கபிலர் பாடல்

ஆட்சி பறிபோன காலத்தில் அரசுக் கட்டில் ஏறத் தனக்கு உதவியவரை மறந்த நன்றி கெட்ட மன்னன் போல இல்லாமல் இருப்பாயாயின் மயில் தோகை போன்று செழித்துள்ள இவளது கூந்தல் மெத்தை உனக்கே உரியது, என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

கன்று பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் தினைக் கதிர்களை உண்ணும் நாட்டை உடையவன் அந்தத் தலைவன். 

No comments:

Post a Comment