Pages

Wednesday, 30 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 223


My sex beauty could not be seen even by gentle men.
My friend! You are calling me to see town festival (image). It is not good for me. There will be good gentle men. (They will see me to marry). It is not good. My sex cherished by my mother has already been taken by him giving me some THAZAL, THATTAI and MURI (leaf-dress) along with tempting words “These are apt to you”. This is my position.

This is a poem compiled by VENNAGANAR son of MADURAI KADAIYATTAR
2nd century B.C.

223. குறிஞ்சி

''பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் (படம்)
செல்வாம் செல்வாம்'' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, ''இவை
ஒத்தன நினக்கு'' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது.

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் பாடல்

தோழி, திருவிழா பார்க்கப் பக்கத்துப் பேரூருக்குச் செல்லலாம் என்கிறாய். அது சரியன்று. அங்கு நல்ல நல்ல பெருமக்கள் வருவார்கள். என் தாய் என்னைப் பாதுகாத்த என் பெண்மை நலத்தை, (தினைப்புனம் காக்கும்போது) தழல், தட்டை, முறி (தழையாடை) ஆகியவற்றைஉனக்குத் தக்கவை இவைஎன்று பொய் சொல்லிக் கொடுத்துவிட்டு, அவன் என்னை எடுத்துக்கொண்டான். (திருவிழாவுக்குச் சென்றால் என் பெண்மை நலத்தைப் பிறர் பார்ப்பார்களே!)   

No comments:

Post a Comment