Pages

Wednesday, 30 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 224


How a dumb troubles when his cow kuraal in color troubles to save her from quagmire so I am in a trouble. He (my lover) is passing through a route where several branches of routes directing.

This is a poem compiled by KUVAL MAINTAN
2nd century B.C.


224. பாலை

கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

பிரிவிடை ''இறந்துபடும்'' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.

கூவன் மைந்தன் பாடல்


தோழி, தன் குரால் பசு சேற்றுக் குழியில் விழக் கண்ட ஊமையன் (“மா மா” என்று குரல் எழுப்ப, பசுவும் அவ்வாறே குரல் எழுப்ப, யாரும் உதவ வராதது கண்டு ஊமையன்) துன்புறுவது போல அவரைப் பிரிந்து துன்பத்தைப் பொறுக்க முடியாத நோயால் துடிக்கிறேன். வழிகள் பலவாகப் பிரிந்து செல்லும் கவலை வழியில் அவர் சென்றுள்ளார். (திரும்ப வழி தெரியாமல் திண்டாடுகிறாரோ என்னவோ) என்னைப் பிரிந்த கொடுமை ஒருபுறம். இதனால் வந்த நோய்தான் என்னைத் தூங்கவிடாமல் வைத்திருக்கும் நோய். 

No comments:

Post a Comment