Pages

Tuesday, 29 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 222


Image, top – canoeing a western lady - தலைப்புணை
Image, below – rowing a western lady - கடைப்புணை

She rained love in her eyes. She was wearing flower PITHIGAI in her hair dressed back. She followed me water festival. When I was canoeing my boat she followed me canoeing. When I was rowing my boat she also followed me rowing her boat. When I swim leaving my boat she also followed me swimming. (I fell in her love-net)


This is a poem compiled by ANTHAIYAR of Sirai_kudi village.
2nd century B.C.

222. குறிஞ்சி

தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது.

சிறைக்குடி ஆந்தையார் பாடல்

அவள் மழையில் நனைந்திருக்கும் தளிர் போன்ற கண்ணால் அன்புமழை பொழிபவள். மழைநீர் ஒழுகும் பித்திகைப் பூ மொட்டுகளைத் தலையில் அணிந்திருந்தாள். நீராட்டு விழாவின்போது என்னைப் பின்தொடர்ந்தாள். புணையில் ஏறி அதன் தலைப்பக்கமாகச் சென்றால் அவளும் அவளது புணையில் தலைப்பக்கமாகவே வந்தாள். நான் புணையின் கடைப்பக்கமாகப் பின்புறம் சென்றால் அவளும் பின்புறமாகவே அவள் புணையில் தொடர்ந்தாள். நான் புணையை விட்டுவிட்டு நீரில் நீந்தினால் அவளும் அவ்வாறே நீரில் நீந்தி என்னைத் தொடர்ந்தாள். (என்னால் விலக முடியவில்லை. அவளிடம் சிக்கிக்கொண்டேன் – என்கிறான் தலைவன்)

1 comment:

  1. what a commendable job!
    What Herculean attempt
    May you live long brother poet
    with your dutiful wife

    ReplyDelete