This is a poem compiled by MUDU_KOTRAN of Uraiyur village
2nd century B.C.
221. முல்லை
அவரோ
வாரார் முல்லையும்
பூத்தன;
பறியுடைக்
கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு
வந்து கூழொடு பெயரும்
ஆடுடை
இடைமகன் சென்னிச்
சூடிய
எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண்
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
உறையூர் முது கொற்றன் பாடல்
எங்கும்
முல்லை எதிலும் முல்லை. நான் முல்லை சூடி மகிழ அவர்தான் வரவில்லை. இலை பறித்துத் தரும்
வாங்கறுவாளை ஆடுகளோடு விட்டுவிட்டுப் பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் குடிக்கக்
கூழை எடுத்துக்கொண்டு மீளும் இடையன் கூடத் தன் தலையில் முல்லை மொட்டுகளைச் சூடிக்கொண்டிருக்கிறானே!
No comments:
Post a Comment