This is a poem compiled by MA_SATTIYAR of Okkur village
2nd century B.C.
220. முல்லை
பழ
மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை
மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி
சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு
சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு
முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு
சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின் தோழி! பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு
உரைத்தது.
ஒக்கூர் மாசாத்தி பாடல்
எப்போதோ
பெய்த மழையில் முளைத்து புதிதாக விளைந்துள்ள வரகுப் பயிரை இரலை மான் மேய, கதிர் இல்லாத அதன் இருவிக் கோலில் முல்லைப்பூ, புறவு
என்னும் முல்லை நிலத்தில், வெருகுப் பூனையின் சிரிக்கும் பல்
போல மொட்டு விட்டுப் பூக்க வண்டு மொய்க்கும் மாலை நேரம் ஆகியும் பொருளுக்காகப் பிரிந்தவர்
திரும்பி வரவில்லையே, தோழி.
No comments:
Post a Comment