This is a poem compiled by KOTRAN
2nd century B.C.
218.பாலை
விடர்
முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் (படம்)
கடனும்
பூணாம்;
கைந்
நூல் யாவாம்;
புள்ளும்
ஓராம்;
விரிச்சியும்
நில்லாம்;
உள்ளலும்
உள்ளாம் அன்றே தோழி!
உயிர்க்கு
உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு
வரை அமையா நம் வயின்
மறந்து
ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.
பிரிவிடை, ''ஆற்றாள்''
எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கொற்றன் பாடல்
அவர் என் உயிருக்கு
உயிர் போன்றவர். கண் இமைக்கும் கால அளவு கூட அவர் இல்லாமல் நான் இருக்க முடியாது. அப்படி
இருந்தும் அவர் என்னை விட்டு அங்கே தங்கியுள்ளார். அவர் வருவாரா மாட்டாரா என்று புள்ளோ
விரிச்சியோ பார்க்கமாட்டேன். (பார்த்தால் என் விருப்பத்துக்கு
மாறுபட்டு வந்தால் என் செய்வேன்) அவர் வரவை எண்ணி மலைக்குகையில் உள்ள கொற்றவை தெய்வத்துக்கு நேர்த்திக்
கடன் பூண்பதோ, கையில் காப்புநூல் கட்டிக்கொள்வதோ செய்யமாட்டேன். அவரை நினைக்கக் கூட
மாட்டேன். (நான் அவரை நினைத்துக் குறைபட்டுக்கொண்டால்
அவரது தவற்றுக்காக தெய்வம் அவரைத் தண்டிக்கும் அன்றோ)
No comments:
Post a Comment