I converse with him about our position. “We are
spending our day time dismissing parrots from the harvest of millet in the
field. We are afraid of your danger while you approach in night time”. Finding solution
of elopement he becomes great. I am a simple and small girl. Your matured life
becomes older. (What is the solution?)
This is a poem compiled by MUDA_KOLLANAR of Thangal village
2nd century B.C.
217. குறிஞ்சி
தினை
கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு
நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச்
செய்வாம்,
எம்
இடும்பை நோய்க்கு?'' என
ஆங்கு
யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு
மலைநாடன் உயிர்த்தோன் மன்ற;
ஐதேய்
கம்ம யானே;
கழி
முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக்
கூறியது.
தங்கால் முடக்கொல்லனார் பாடல்
நீ ஓங்குமலை நாடன். உயர்ந்தவன். தினையில் கிளி ஓட்டிப் பகல் காலம் போய்விடுகிறது. இரவில் நீ வரின் உனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்த மன உளைச்சலைப் போக்க நான் என்ன செய்வேன் என்றேன்.
அதற்கு
அந்த ஓங்குமலை நாடன் தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்று மணந்துகொள்ள ஒப்பி உயர்ந்தவன்
ஆகிவிட்டான். நானோ மிகவும் சிறியவள். நீயோ பருவம் அடைந்து முதிர்ந்துவிட்டாய். (இதற்கு
என்ன வழி)
No comments:
Post a Comment