The sun at summer is setting on the mountain. Dimming
evening is proceeding. Will he return back today, asked lady?
He passed by the route where male elephant after
searching water in the empty pond was guarding its female against line-skinned
tiger attack, consoled her maid hinting on seeing the scene, he will return
soon in thought of her lady.
This is a poem compiled by MALLANAR, son of GNALALAR
of Alakkar street, in Madurai village.
2nd century B.C.
215. பாலை
\
படரும்
பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ்
மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல்,
வாழி தோழி! நீர் இல்
வறுங்
கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்
பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு
வரி இரும் புலி காக்கும்
நெடு
வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல்
தோழி, இன்றாவது அவர் வருவாரா எனக் கேட்டுக்கொண்டே நடந்தாள். எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பினாள். கோடை காலத்துக் கதிரவன் மலையில் மறைகிறானே என்று கூறி நெஞ்சம் கலங்கினாள்.
பெரிய தந்தங்களை உடைய ஆண்யானை நீர் இல்லாத குளத்தைத் துளாவிவிட்டு அருகில் இருந்த பாறை ஓரத்தில் தன் பெண்யானையைத் தழுவிக்கொண்டு வரிப்புலி தாக்க வருமோ எனக் காவல் காத்துக்கொண்டிருக்கும் வழியில் அவர் சென்றார்.
(அதைப்
பார்த்துத் தன்னை நினைப்பாரோ என எண்ணிப்பார்த்தாள்)
No comments:
Post a Comment