Pages

Monday, 28 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 213


Male-deer kicks the land to feed roots to his female and young and stands to make shadow to the young one. In that kind of route he is passing through.
Be happy, on seeing this scene, he, a man of affection will return soon.  
Friend-maid consoles her lady while her lover is away from her earning wealth.

This is a poem compiled by KOTRAN of Kanchi village living in its part Kachippedu
2nd century B.C.

213. பாலை

நசை நன்கு உடையர் தோழி! ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

''நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. 

கச்சிப் பேட்டுப் காஞ்சிக் கொற்றன் பாடல்

கலை = ஆண்மான் * மறி = மான்குட்டி * ததரல் = பெண்மான்

ஆசை மிகுதியாக உடைய அவர் நம்மோடு (தலைவியோடு) இனிமையாக உறங்குவதை வெறுத்துப் பொருள் தேடச் சென்றுள்ளார். வழியில் தலையில் கிளைக் கொம்புகளை உடைய கலைமான் காலால் ஒற்றி மண்ணுக்கு அடியில் இருந்த கிழங்கைப் பசியால் வாடும் தன் பெண்மானையும் குட்டியையும் உண்ணச் செய்துவிட்டுத் தான் தன் குட்டிக்கு நிழலாக வெயிலில் நின்று காலம் கழிப்பதைப் பார்ப்பார். 

(அதனைப் பார்த்ததும் உன் நினைவு வந்து திரும்பிவிடுவார், கவலை வேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்) 

No comments:

Post a Comment