Pages

Sunday, 27 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 211


You my dear! Don’t be afraid of him who leaves you alone to be in a position that punch of your hair to be reduced and your bangles dropping down. He is passing through a arid land where honey-bird THUMBI (image) flies away without satisfaction having honey only few flowers in OMAI tree. (As the bird he will return back).

This is a poem compiled by BOOTANAR with a title “Kaval Mullai”
2nd century B.C.

211. பாலை

அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி! எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி (படம்)
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

''இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, ‘நம்மை ஆற்றார்
என நினைந்து மீள்வர்கொல்?''
எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.

காவன் முல்லைப் பூதனார் பாடல்

தோழி! வாழி! உன் ழகிய கூந்தல் சிலவாயிற்று. வளையல் நெகிழ்ந்தது. இப்படி நீ நொந்தும் உனக்கு அருள் செய்யாமல் உன்னை விட்டுவிட்டுச் சென்றவருக்கு என்ன ஆயிற்றோ என நீ அஞ்ச வேண்டாம். அவர் சென்ற உயர்ந்த மலையில் சில பகுதி வெயிலில் தீய்ந்து போயிருக்கும் ஓமை மரத்தில் கோடை காலத்தில் பூத்திருக்கும் ஓரிரு மலர்களில் உள்ள தேனை உண்டு நிறைவுறாமல் தும்பி பறக்கும் நீரில்லாத சுர நிலத்தில் அவர் சென்றுள்ளார். (அவர் மனமும் அப்படி நிறைவுறாமல்தான் இருக்கும். திரும்பிவிடுவார்)  


No comments:

Post a Comment