Pages

Saturday 26 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 207


He left me without information thinking that if he would have informed it would be impossible to leave. The calling voice of a kite perking on a branch (image) of OMAI tree, the kite that left its mate is the only conversational word to hear. He is walking on without his heal with safety jump to avoid sun heat on stone way that already made blister on his feet.

This is a poem compiled by URAIYAN (Rain-man)
2nd century B.C.

207. பாலை

''செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்'' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் (படம்) புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

செலவுக் குறிப்பு அறிந்து. ''அவர் செல்வார்'' என்று தோழி சொல்ல,
கிழத்தி உரைத்தது.

உறையன் பாடல்

சொல்லிவிட்டுச் சென்றால் செல்லமுடியாது என்று சொல்லாமல் சென்றாராம். தன் கூட்டத்து இணையைப் பிரிந்த ஒற்றைப் பருந்து ஓமை மரக் கிளையில் இருந்துகொண்டு புலம்பும் குரல்தான் அவருக்குப் பேச்சுத் துணையாம். வழியில் பொடி சுடுவதால் கால் ஊன்ற முடியாமல் தாவித் தாவிச் செல்கிறாராம். நம்மீது அக்கரை உள்ள சிலர் இதனைப் பார்த்து வந்து சொல்கிறார்கள்.


No comments:

Post a Comment