Pages

Friday 25 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 206

You the wise man! You must know that it is difficult to live along with love affection, because, the behavior of the sweetest girl who offer her to me as sweet word of mouth is also become reverse to treble me always.  

This is a poem compiled by AIYUR MUDAVN (a lame man of AIYUR village)
2nd century B.C.

206. குறிஞ்சி

அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்:
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஐயூர் முடவன் பாடல்

அமிழ்த இன்சொல் போல் இனிக்கும் இனியவளின் குணமே துன்பத்தில் உழலச் செய்யுமாயின் காமத்தோடு சேர்ந்து வாழ்வது என்பது முடியாத ஒன்று ஆகும். அறிவுடையீரே, காமம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். 

No comments:

Post a Comment