Pages

Friday, 25 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 204

Love lust is not a Devil-maid or contiguous disease. It is a repast like an elderly cow chews the budding grass in a dry land.

This is a poem compiled by MILAI PERUNKANDAN
2nd century B.C.

204. குறிஞ்சி

''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம் பெரும்தோளோயே!

தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.

மிளைப் பெருங் கந்தன் பாடல்

நண்ப, காமம் காமம் என்று சொல்லுகிறார்களே அது பிடித்தாட்டும் பேய் உணர்வோ உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிணிநோயோ அன்று. காய்ந்த நிலத்தில் துளிர் விடும் முற்றாத இளம் புல்லைக் கிழட்டுப் பசு மேய நாவால் சுழற்றி மகிழ்வது போன்ற நல்விருந்து.

No comments:

Post a Comment