This is a poem compiled by NEDUM-PALLIYATTAN (good musician)
2nd century B.C.
203. மருதம்
மலை
இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை
தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின்
காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள்
நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன்
ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன்
யான்,
பண்டு
ஒரு காலே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.
நெடும்பல்லியத்தன் பாடல்
என் தலைவனின்
ஊர் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. இரண்டு ஊரின் மரங்களும் தெரிகின்றன. இடையில்
மலை இல்லை. அப்படி இருந்தும் கடவுளை விரும்புபவர் போல விலகி வாழ்கிறார். அன்று என்ன
செய்தார்? அதனை நினைத்து என் மனம் பரிந்து ஓடுகிறது.
No comments:
Post a Comment