He
is the Man of mountain where bat (image top and
middle) eats sweet mango fruit and sour Indian goose berry fruit (image – bottom) and then rest hanging on wild bamboo
top.
This is a poem compiled by an unknown poet
2nd century B.C.
அமிழ்தம்
உண்க நம்
அயல் இலாட்டி,
பால்
கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல
மென் சிறை வள் உகிர்ப் பறவை (படம், மேலே, நடுவில்)
நெல்லி அம் புளி (படம் – கீழே) மாந்தி,
அயலது
முள்
இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை
நிவந்து ஓங்கிய சோலை
மலை
கெழு நாடனை வரும் என்றோளே!
கிழத்தி உரைத்தது.
தேக்கொக்கு = இனிய மாம்பழம் * அயலிலாட்டி = பக்கத்து வீட்டுக்காரி
பக்கத்து வீட்டுஉக்காரி நம் நாடனை வருக என வரவேற்கிறாள். அவள் அமிழ்தம் உண்பாளாக.
பால்
கலந்தது போல் இனிக்கும் மாம்பழம் உண்ட வௌவால் புளிக்கும் நெல்லிக்காயையும் உண்டு திரும்பி
முள் நிறைந்த மூங்கில் மரத்தில் தொங்கும் சோலையை உடைய மலைநாடன் அவன்.
No comments:
Post a Comment