Pages

Thursday, 24 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 200


Her crave is emerging thus.
He left me saying that I shall return home at the time of these signals. Then will be rain. Evening comes. Thunder echoes at the hill pleasing. You my dear friend! He didn't come. He has completely forgotten. Now the wind is blowing from the flood downing from the mountain along with the fragrant smell of flowers.

This is a poem compiled by AVVAIYAR
2nd century B.C.

200. நெய்தல்

பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார் தோழி!
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.

பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,
''பருவம் அன்று; வம்பு''என்ற வழி,
தலைமகள் சொல்லியது.

ஒளவையார் பாடல்

மழை பெய்த குன்றத்திலிருந்து பூ மணம் கமழத் தாவித் தாவி வரும் காற்றோடு கலந்து வெள்ளம் இறங்குகிறது. அவர் இன்னும் வரவில்லையே தோழி! அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார். நாமோ மறக்கவில்லை. அவர் வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற காலம் இது. அது மாரிக்காலம். மாலை நேரம். இடியோசை மலையில் இனிமையாக எதிரொலிக்கும். அதற்கு முன்பே பாதுகாப்பு அளிக்க வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாரே. அவள் ஏக்கம் இது.  

No comments:

Post a Comment