He
has already enjoyed her hair smell of bliss that resembling the air-smell he
enjoyed at the park of King Ori, an endower of chariot to needed.
This is a poem compiled by PARANAR
2nd century B.C.
199. குறிஞ்சி
பெறுவது
இயையாது ஆயினும்,
உறுவது
ஒன்று
உண்டுமன்
வாழிய நெஞ்சே! திண் தேர்க்
கை
வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி
கமழும் நெறிபடு கூந்தல்
மை
ஈர் ஓதி மாஅயோள் வயின்,
இன்றை
அன்ன நட்பின் இந் நோய்
இறு
முறை என ஒன்று இன்றி,
மறுமை
உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப,
நெஞ்சிற்குக்
கிழவன் உரைத்தது.
பரணர் பாடல்
பெற விரும்புவது கிடைக்காவிட்டாலும் அடையப்போவது நிச்சயமாக ஒன்று உண்டு என்பதை உணர்ந்துகொள். நெஞ்சே! இவ் வாழ்வில் இவளைத் துய்த்துப் பெற்ற இன்ப வேட்கை மறுமையிலும் தொடர்ந்தால் மகிழ்வு கிட்டும்.
மாயவளின் நெளிநெளியான கூந்தல் மணம் தேர் வழங்கும் கொடையாளி ஓரி வள்ளலின் காட்டிலிருந்து வரும் மணம் போல இன்பமானது.
No comments:
Post a Comment