Pages

Wednesday, 23 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 198


Words by:   friend-maid
Words to:   hero
When:         he approaches her at her residence  
Words:        Mother may come any time here. You can get her in the millet field while we gourd the harvest from parrot steeling.
Land was prepared by cutting YAM trees and firing them.
The millet plant grew as sugar-cane size.
The yield is elephant’s hand.
The hero has made up his chest applying sandal mud.
Image:         millet harvest.

This is a poem compiled by KAPILAR
2nd century B.C.

198. குறிஞ்சி

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்க தில்ல; வருகுவள் யாயே.

தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.

கபிலர்

கூற்று:      தோழி
கேட்போர்:   தலைவன்,
களன்:       தலைவியை நாடித் தலைவன் வந்தபோது
பொருள்:   
இங்கு வரவேண்டாம். தாய் இங்கு வருவாள். தினைப்புனம் காக்கச் செல்வோம். அங்கு வரலாம்.
யாம் மரத்தை வெட்டிச் சாய்த்து எரித்த புனம். புனத்தில் கரும்பு போல் வளர்ந்த தினை. தினையில் பால் பிடித்து யானையின் துதிக்கை போலத் தொங்கும் கதிர். கதிரைக் கவர வரும் கிளி. கிளியை ஓட்டச் செல்வோம். (அங்கு வரலாம்
படம்:       தினைக்கதிர்


No comments:

Post a Comment