Words to: Him
When: When he returns from concubine’s house
Words: Once you said jiggery even unripe VEMBU fruit
is given to you by her hand. But now you are saying it is hot and sour even the
dead cold sweet water from the spring-pond of PARAMBU country of PAARI king.
Image: unripe VEMBU fruit, jiggery
This is a poem compiled by MILAI KANDAN
2nd century B.C.
வேம்பின்
பைங் காய் என் தோழி தரினே,
''தேம்
பூங் கட்டி'' என்றனிர்; இனியே,
பாரி
பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத்
திங்கள் தண்ணிய தரினும்,
''வெய்ய
உவர்க்கும்'' என்றனிர்-
ஐய! அற்றால் அன்பின் பாலே.
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி
கூறியது.
மிளைக் கந்தன் பாடல்
கூற்று: தோழி
கேட்போர்: அவன்
களன்: பரத்தையிடமிருந்து மீண்டபோது
பொருள்:
இவள் வேப்பங்காய் தந்தாலும் வெல்லக்கட்டி
என்று என்ற காலம் போய் பாரியின் பறம்பு நாட்டுப் பனிச்சுனையின் தெளிந்த நீரைத் தை மாதக்
குளிர்ச்சியோடு தந்தாலும் சுடுகிறது, உவர்க்கிறது என்கிறீர். ஐய! உன் அன்பு இப்படி
ஆகிவிட்டது.
பயன்: திருந்தி வா எனல்.
No comments:
Post a Comment