This is a poem compiled by THERATHARAN
2nd century B.C.
195. நெய்தல்
சுடர்
சினம் தணிந்து குன்றம் சேரப்
படர்
சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு
உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
''இன்னாது,
இரங்கும்''
என்னார்
அன்னோ
தைவரல்
அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு
பாவை (படம்) அன்ன என்
மெய்
பிறிதாகுதல் அறியாதோரே!
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி
மெலிந்து கூறியது.
தேரதரன் பாடல்
வெயில்
குறைந்து கதிரவன் மலைக்கப்பால் மறைகிறான். துன்பம் தரும் மாலை வந்துவிட்டது. பொருள்
முடித்து வருபவர் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. நான் துன்பத்தால் வருந்துவேன் என்பதை
அவர் நினைக்கவில்லை போலும். மணலால் செய்த பாவைப்பொம்மை காற்றில் கரைவது போல என் மேனி
கரைகிறதே!
No comments:
Post a Comment