My mind is bewildering. I am hearing thunder on one
side. I am seeing peacock dancing on other side welcoming the rain. (video) What are
they illustrating? (He assured me that he will return home rainy season starts)
This is a poem compiled by KOVARTHANAR
2nd century B.C.
194. முல்லை
என்
எனப்படுங்கொல் தோழி!
மின்னு வர
வான்
ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான
மஞ்ஞை கடிய ஏங்கும்; (இயங்கு படம்)
ஏதில
கலந்த இரண்டற்கு என்
பேதை
நெஞ்சம் பெரு மலக்குறுமே?
பருவ வரவின்கண்,
''ஆற்றாளாம்'', எனக்
கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது.
கோவர்த்தனார் பாடல்
இரங்கும் = ஒலிக்கும் * ஏங்கும் = ஏக்கம் கொள்ளும் * மலக்குறும்
= கலங்கும்
ஒரு பக்கம்
வானம் இடி முழங்குகிறது. இன்னொரு பக்கம் மயில்
மழைக்காக ஏக்கம் கொண்டு ஆடுகிறது. இவை என்ன சொல்கின்றன எனத் தெரியாமல் என் நெஞ்சம்
கலங்குகிறது. (கார் காலம் வருமுன் திரும்பிவிடுவேன் என்று அவர் சொல்லிச் சென்றாரே)
👌
ReplyDelete