He is a Man of the land where toad (image) being in a spring-pond with water as a
small pot filled with toddy, claims its voice as a play instrument THATTAI (image).
This is a poem compiled by ARISIL KIZAR
2nd century B.C.
மட்டம்
பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு
வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை (படம்)
தட்டைப்
பறையின் (படம்),
கறங்கும்
நாடன்
தொல்லைத்
திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன்
எம் தோளே;
இன்றும்,
முல்லை
முகை நாறும்மே.
தோழி
கடிநகர் புக்கு,
''நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!''
என்றாட்குக் கிழத்தி உரைத்தது
அரிசில் கிழார் பாடல்
உன் மேனி
மணக்கிறதே! – இது தோழியின் பாராட்டு.
சென்ற
மாதம் முழுநிலா நாளில் நாடன் என்னைத் தழுவினான். அவன் அணிந்திருந்த முல்லைமாலை மணம்
இன்னும் என் தோளில் வீசுகிறது. – இது தலைவியின் விடை.
நாடன்
கள் வைத்திருக்கும்
சிறு மொந்தை போலக் குழி இருக்கும் சுனையில் இருக்கும் பெரிய வாயை உடைய தேரை தட்டைப்பறை
போல ஒலி எழுப்பும் நாட்டை உடையவன் அந்த நாடன்.
No comments:
Post a Comment