Pages

Sunday, 20 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 191


You see! The birds are calling their mate on the top of the trees. If he who leaves me alone comes you need not care me combing my hair (drawing) and hugging me to console. The lady says to her friend-maid.

This is a poem compiled by an unknown poet
2nd century B.C.

191. முல்லை

உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ''போதின்
பொம்மல் ஓதியும் புனையல்; (ஓவியம்)
எம்மும் தொடாஅல்'' என்குவெம் மன்னே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அங்கே பார். தாங்கும் கிளைகளில் இருந்துகொவண்டு பறவைகள் தம்மைப் பணர்ந்த பறவைகளை அழைக்கும் குரலை எழுப்புகின்றன. என்னைப் பிரிந்த அந்தக் குற்றமற்றவன் வந்தவுடன் “நீ (தோழி) என் கூந்தலை முடிக்க வேண்டாம். என்னைத் தொடவும் வேண்டாம்” என்று சொல்லுவேன். – என்கிறாள் தலைவி. 

No comments:

Post a Comment