Pages

Sunday, 20 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 190


She discloses her feelings to her friend-maid.
Thundering sound will turn out the spreading head of the cobra in forest and the bell ring in the neck of the cow (image) that nods. (I shall afraid off that moment) Now the clouds make thunder. Will he know my leaning position by love-sick or not?

This is a poem compiled by BOOTAM-PULLAN
2nd century B.C.

190. முல்லை

நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி! பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் (படம்) குரலே?

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பூதம்புல்லன் பாடல்

தோழி! நள்ளிரவில் இடி முழங்கும்போது காட்டில் சினங்கொண்டு படமெடுத்தாடும் பாம்பின் தலை துமியும். வீட்டுத் தொழுவத்தில் மாடு ஆட்டும் கழுத்துமணி ஒலிக்கும். (நான் நடுங்குவேன்) பொருள் தேடச் சென்றவர் என் கூந்தல் சாயும் தோளில் செறிந்திருந்த வளையல் நெகிழ்ந்து கழல்வதை அறிவாரோ மாட்டாரோ?

No comments:

Post a Comment