He realizes her position being only with few bangles
after falling down one by one longing for him.
He points out that his chariot will go fast as the
water falling in falls and the rim of the wheel cutting the grass as the meteor
falls (image) towards the earth.
This is a poem compiled by BOOTAN DEVAN belongs ELAM
(Sri Lanka) living in Madurai village.
2nd century B.C.
189. பாலை
இன்றே
சென்று வருதும்; நாளைக்
குன்று
இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம்
பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு
வீழ் கொள்ளியின் (படம்) பைம் பயிர் துமிப்ப,
கால்
இயல் செலவின், மாலை எய்தி,
சில்
நிரை வால் வளைக் குறுமகள்
பல்
மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன்
பாகற்கு உரைத்தது
மதுரை ஈழத்துப் பூதன் தேவன் பாடல்
செல்லவேண்டிய
இடத்துக்கு இன்றே சென்று மீண்டுவிடவேண்டும். நாளை என் மனைவியுடன் நான் மகிழவேண்டும்.
அவள்
கையில் சில வளையல்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.
தேர்
குன்றிலிருந்து விழும் அருவி போல விரைந்து செல்லட்டும். பிறை போன்ற அதன் சக்கர விளிம்பு
வானிலிருந்து விழும் எரிமீன் போலப் பயிரினங்களைத் துணித்துக்கொண்டு காற்றைப் போல விரையட்டும்.

No comments:
Post a Comment