Pages

Saturday, 19 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 187


He is a Man of mountain track where elk-calf (image) plays after drinking mother milk. My mind longs for his union without caring about his animosity.

This is a poem compiled by KAPILAR
2nd century B.C.

187. குறிஞ்சி

செவ் வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி!
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.

வரைவு நீட்டித்த வழி,
ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித்
தலைமகனை இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது.

கபிலர் பாடல்

அவன் கல்நெஞ்சக்காரன் என்று எண்ணாமல்  அவனுக்காக என் நெஞ்சு உருகுகிறது. செமையான மலையில் வாழும் வருடைமான் குட்டி (படம்) தாய்ப்பாலை உண்டு நிழலில் துள்ளி விளையாடும் நாடன் அவன். (அதைப் பார்த்தும் அவன் நெஞ்சு என்னை நினைக்கவில்லையே).

No comments:

Post a Comment