The lady fall-in reputed.
He, the mountain Man did all.
The mountain at which the glory lily seems as a
cobra shrinking it’s widening head.
(My entire complexion has ebbed as glory lily - image)
This is a poem compiled by ILAVETTAN, a cloth
merchant in Madurai village
2nd century B.C.
185. குறிஞ்சி
''நுதல்
பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு
மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள்
ஆகுதல் நும்மின் ஆகும்'' எனச்
சொல்லின்,
எவன்
ஆம் தோழி! பல் வரிப்
பாம்பு
பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின்
தொலைந்த ஒண் செங் காந்தள் (படம்)
கல்மிசைக்
கவியும் நாடற்கு, என்
நல்
மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து
வேறுபட்ட தலைமகளை,
''வேறு பட்டாயால்''
என்றாட்குக்
கிழத்தி உரைத்தது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடல்
நெற்றியில்
பசப்பு ஊர்தல்,
உடல் திதலை-வெளுப்பு ஏறி வாடல்,
மூங்கில் போன்ற தோள் இளைத்தல்
ஆகிய நிலைமையை அடைதல் உனக்குத்தான் – என்று சொல்கிறாயே தோழி!
நாடனுக்குத் தந்து நான் அழிந்தது உனக்குத் தெரியாதா?
உடல் திதலை-வெளுப்பு ஏறி வாடல்,
மூங்கில் போன்ற தோள் இளைத்தல்
ஆகிய நிலைமையை அடைதல் உனக்குத்தான் – என்று சொல்கிறாயே தோழி!
நாடனுக்குத் தந்து நான் அழிந்தது உனக்குத் தெரியாதா?
படமெடுத்த பாம்பு தலையைச் சுருக்கிக்கொண்டது போல,
காந்தள் பூ கல் பாறை மேல் கவியும் நாடு அல்லவா அவன் நாடு.
(நானும் அப்படித்தான் ஆனேன்)

No comments:
Post a Comment