The gentle man do not lie what he witnessed. I am
saying what is happened. Avoid of going there. I fell in her eye-net. I do not
like to return back. It is a good thing I did. My mind refuses to consider
which is better, being with her or being away with her.
She is a girl with beautiful hair that resembles the
peacock feather with its eye-knot (image). Her father is a fisher man using net to
fish. (As he does she holds me by her eye-net)
This is a poem compiled by BIRAMA-TATTAN, an Ariya
king being famous in yazh-music
2nd century B.C.E.
184. நெய்தல்
அறிகரி
பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல்
ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கு
இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு
ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்
மயிற்கண் (படம்) அன்ன மாண் முடிப் பாவை
நுண்
வலைப் பரதவர் மட மகள்
கண்
வலைப் படூஉம் கானலானே.
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.
ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் பாடல்
ஆன்றோருக்கு
அறிந்ததைச் சொல்லாமல் பொய் சொல்லும் பழக்கம் இல்லை. (அப்படித்தான் நான் உண்மையைச் சொல்கிறேன்)
(பொருளா, இன்பமா) இதனைக் காட்டிலும் இது சிறந்தது என எண்ணிப் பார்க்காமல் என் நெஞ்சம்
அவளுடனேயே நின்றுவிட்டது. இதுதான் மாட்சிமை தங்கிய நெஞ்சம். யாரும் அவள் வாழும் அந்தச்
சிறுகுடிப் பக்கம் செல்லவேண்டாம்.
அவள்
நுண்ணிய வலையால் மீன் பிடித்து வாழும் பரதவர் மகள். மயிலின் தோகைக்கண் போன்ற முடியை
உடையவள். அவளது கண்வலையில் நான் மாட்டிக்கொண்டேன்.

No comments:
Post a Comment