This is the season when flower KAAYAA blossoms in
the color of peacock head (image). (This is the rainy season that he assured me to return
home). Would he happen to see a male deer parting his female mate? (No, he could not see them at all. So he will return soon
watching them in couple). Flower KONTRAI is blooming in my faded complexion
that made me fell in decaying green-sick. (The
color of the flower will also remind him my position).
This is a poem compiled by AVVAIYAR
2nd century B.C.E.
183. முல்லை
சென்ற
நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம்
போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு
தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை
மானையும் காண்பர்கொல், நமரே?
புல்லென்
காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென்
மயில் எருத்தின் (படம்) தோன்றும்
புன்
புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கண்,
''ஆற்றாள்'' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
ஒளவையார் பாடல்
கொன்றைப் பூ அவரைப் பிரிந்த என் மேனி பசலைநிறம் பாய்ந்திருப்பது போலப் பூத்திருக்கும் காலம் இது.
பசலை என்பது காமாலை நிறம்
இந்த நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டு பொருள் தேடச் சென்ற காட்டு வழியில் பெண்-மானை விட்டுப் பிரிந்து ஓடும் ஆண் இரலை மானையும் அவர் பார்ப்பாரோ!
(பிரியாமல் மேயும் மானைக் கண்டு திரும்பிவிடுவார் என நம்புகிறாள்)
அவர் சென்ற கானத்தில் மயிலின் எருத்துநிறம் (கழுத்து மற்றும் கொண்டைப்பூ நிறம்) போலக் காயாம்பூ பூத்திருக்குமே!

No comments:
Post a Comment