The wife confesses that her position is to not to sulk her husband what else he may do. The farmer binds the calf. The buffalo after its new delivery (image) feeds grass rounding the calf. In such away wife is banded fostering and doing home duty.
This is a poem compiled by KILIMANGALAM KIZAR
2nd century B.C.E.
181. குறிஞ்சி
இது மற்று எவனோ தோழி! துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி
ஆற்றாளாகிய தலைமகள்
ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி,
தலைமகள் இயற்பட மொழிந்தது.
கிள்ளிமங்கலம்கிழார் பாடல்
உழவன் புதுக் கன்றுக்குட்டியைக் கட்டிப்போட்டுவிட்டால்
தாய் எருமை கன்றை விட்டு நீங்காமல்
சுற்றியிருக்கும் பால் பிடித்த பயிரை மேய்ந்துகொண்டிருக்குமாம்.
அந்தக் கன்று போட்ட எருமை போல
நான் வீட்டுக் கடமைகளைச் செய்யும் முதுமகள் ஆகிவிட்டேன்
என்று சொல்லும் தலைவி,
கணவன் இப்படி வாழ்கிறான் என்று
பிணக்கிக்கொள்ளும் தகுதி இல்லாதவள் ஆகிவிட்டாளாம்.
(ஊடல் கொள்ளாமல் கணவனுக்கு இடம் தரும் நிலைமை அவளுக்கு)
![]() |
| கன்று போடும் எருமை |

No comments:
Post a Comment