Pages

Thursday, 17 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 180


He went to earn leaving her at home. The brimming fertile beauty in her female part had become lost. She is in thought of his way in which he is passing through where dry-woods are fallen as in the sugar-cane field after elephant ate and destroyed (image). So he is a man of mercy less.

This is a poem compiled by NAN-NAGAIYAR of Kachipedu village
2nd century B.C.E.

180. பாலை

பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.

கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்

அன்பர் (எதிர்ச்சொல்) வன்பர்

கால்களில் ஏணிப் பழு போன்ற நகங்களை உடைய ஆண்-யானை வந்து அதன் கால்களில் மடிந்து கிடக்கும் கரும்புக் கணுக்கள் (படம்) போலக் காய்ந்து ஒடிந்து மரங்கள் கிடக்கும் காட்டுப் பாதையில் பொருள் தேட அவர் சென்றாரோ! அவர் உறவு இல்லாததால் இவளது அல்குல் வரிகள் வாடிக்கிடக்கின்றன. இவளைத் துறந்தவர் அன்பர் அல்லர். வன்பர்.


No comments:

Post a Comment