Sir,
After hunting the deer HADAMA your dog becomes tired. The sun is also setting. Do not proceed home. There you can see our village. You can detect a bee-hive (image) in a branch of a green bamboo bending after tasting by an elephant. That is our residence. (You can come and marry her)
The friend-maid of the Lady conveys these words to the Gentle Man.
This is a poem compiled by KUTTUVAN KANNAN
2nd century B.C.E.
179. குட்டுவன் கண்ணன் பாடல்
குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய! உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது.
ஐய!
கடம்பு மானைக் கானத்தில் வேட்டையாடி உன் நாயும் இளைத்துவிட்டது.
பொழுதும் போய்விட்டது.
இனி எங்கும் செல்லவேண்டாம்.
உதோ (கண்ணுக்கு எட்டிய தூரத்தில்) பாருங்கள்!
உயர்ந்த மலையில்
யானை உண்ட பின் வளைந்து தொங்கும் மூங்கில் சிம்பில்
தேன்கூடு இருக்கிறதே
அதுதான் எம் ஊர்.
![]() |
| தேன்-கிழி |

No comments:
Post a Comment