Pages

Thursday, 17 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 178

He has already enjoyed her in their clandestine love. Even then he is nervous to mate her after marriage. Her friend-maid ridicules on his behavior saying these words.
Water lily (AMBAL) (image) is weed in paddy field of stagnation water. The water is enough to live fish AIRAI family. The weeding person feels thirsty during their work in water. In such a way you want your wife enjoy in lust immediately after marriage. If she, suppose, appear as crescent on third day after the new-moon how would you behave?

This is a poem compiled by NEDUMPALLIYATTAI
2nd century B.C.E.
This is a poem compiled by NEDUMPALLIYATTAI

178 நெடும்பல்லியத்தை பாடல்

அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
பொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.

அயிரைமீன் மேயும் அளவுக்கு நீர் இருக்கும் 
பழமையான வயல்களில் 
ஆம்பல் மலர்களைக் களையாகப் பறிப்பவர் 
தாகத்துக்கு நீர் வேண்டித் தவிப்பது போல 
நீ இவளது முலைமேல் கிடந்திருந்தும் 
இப்போது ஏங்கி நடுங்குகிறாய். 
பொழுது விழுந்ததும் தோன்றும் பிறை 
அரிதாகத் தோன்றுவது போல 
இவள் கிடைக்காவிட்டால் 
பெரிதும் வருந்துவாய் போல் இருக்கிறதே! 
இதை எண்ணிப் பெரிதும் வருந்துகிறேன்.

தலைவன் திருமணம் ஆனவுடன்  
உறுக்காகத் துடிப்பது கண்டு
தோழி இவ்வாறு கூறுகிறாள்.

ஆம்பல் 


No comments:

Post a Comment