Once he collected my lust in his own accord. It seems that he may come now itself. The waves in sea are calm. The littoral land is dark. Couple birds ANTRIL on tree Palmyra are also chattering in their low voice. (These are the indications of our last conjugal time)
This is a poem compiled by ULOCHANAR
2nd century B.C.E.
177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி தோழி! நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. உலோச்சன்
தணத்தல் = பிரிதல் (மணத்தல் என்பதன் எதிர்ச்சொல்)
தண்டல் = கட்டாயப்படுத்தி வாங்கிக்கொள்ளல்.
கடலோசை தணிந்திருக்கிறது.
கடற்கரையில் ஒரே இருள்.
நீர்த்துறைக் கழிமுகம் அமைதியாக இருக்கிறது.
ஊர் மன்றத்துப் பனைமரத்தில் இருக்கும் அன்றில் பறவைகள் கூட மெதுவாகப் பேசுகின்றன.
நான் பிணக்கிக்கொள்வேனோ என்று அஞ்சிக்
காம இன்பத்தை என்னிடமிருந்து தாமே எடுத்துக்கொண்டு
சிரிக்க வைத்த அவர் இன்று வருவாரோ?
|
தமிழ்வளம், தமிழர் வாழ்வியல் காட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல், முந்நூறுக்கு மேற்பட்ட நூல்கள் - விளக்கம்
Pages
▼
No comments:
Post a Comment