He did not come one or two days only. He came several days and met me. He spoke politely all the time and earned my thought declining towards him. But alas! He disappears as bees desert the hive one day. (Image)
I am howling as one feels when rain falls on neighboring village without a drop in his village.
This is a poem compiled by VARUMULAIYARITTI
2nd century B.C.E.
176. குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது.
வருமுலையாரித்தி பாடல்
ஒரு நாள் அன்று, இரு அன்று, பல நாள் வந்தான்.
பணிவாகப் பேசினான்.
அப்படிப் பெசுவதற்குக் கற்பித்தான்.
என் நெஞ்சம் நன்றாக நெகிழ்ந்துபோயிற்று.
பிறகு …
மலைப் பாறையில் முதிர்ந்திருந்த தேன் ஒருநாள் இல்லாமல் போய்விடுவது போல
அவன் காணாமல் போய்விட்டான்.
நமக்கு ஆசாக (துணையாக) இருக்கவேண்டிய அவன்
இப்போது எங்கே இருக்கிறானோ தெரியவில்லை.
பக்கத்து ஊரில் பெய்த மழை
நம் ஊரில் பெய்யாதது போல
என் நெஞ்சம் கவலைப்படுகிறது.
தோழி இப்படிப் பேசித் தலைவியைத் தலைவன் ஆசைக்கு இணங்கும்படிச் செய்கிறாள்.
No comments:
Post a Comment