I am not disappointing over our loneliness without him. I am concerning over the murmuring of others over his relationship with me.
The lady feels conveying these words to her friend-maid.
He is not with me. What shall I do? Let it be so.
Why others speak about the matter?
He is a Man of littoral land where honey-birds gather in season of tree PUNNAI blooming.
This is a poem compiled by ULOCHAN
2nd century B.C.E.
175. நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி! ''ஈங்கு என் கொல்?'' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது
உலோச்சன் பாடல்
நனை = மொட்டு *
நனைந்த புன்னை = மொட்டு வைத்திருக்கும் புன்னை
இல்லக் கிழத்தி தோழியிடம் சொல்கிறாள்.
சேர்ப்பன் இங்கு இல்லை என வருந்துகிறேன் என்று நினைக்கிறாயா,
இல்லை.
அதை நினைத்து இனி என்ன ஆகப் போகிறது?
அது நடக்கிறபடி நடக்கட்டும்.
அதனைப் பிறர் அறியும்படி இனி கூறவேண்டாம்.
ஊரார் அம்பல் (கமுக்கமாகப்) பேசுகிறார்களே, அது ஏன்?
இதற்காகத்தான் வருந்துகிறேன்.
சேர்ப்பன்
பேரலைகள் மோதும் மணல் அடைந்த கரையில்
பருவத்தில் மொட்டு வைக்கும் புன்னை மரத்தின் பெருங் கிளையில்
தேன் உண்ணும் பறவை இனம் திரண்டு வரும் சேர்ப்புநிலத் தலைவன்.
![]() |
| புன்னை |

No comments:
Post a Comment