Pages

Wednesday, 16 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 174

The heroine asserts her friend-maid the value of wealth and mercy.
It is arid land without rain. The explosive sound of unripe fruit in milk-hedge KALLI (image) will make the dove-couples fly away. He feels such a dreadful way is not meaningful and passes through in order to earn wealth. Hence I come to the conclusion that wealth is worthy than mercy in the material world.   

This is a poem compiled by VENPOOTHI
2nd century B.C.E.

174. பாலை

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வெண்பூதி பாடல்

காட்டு வழி. 
மழை இல்லை. 
கவைமுள் கொண்ட கள்ளிச்செடியின் காய் வெடித்தது. 
இணைந்திருந்த புறாக்கள் அதன் ஒலியைக் கேட்டுப் பறந்தோடின. 
இத்தகைய கொடுமையான வழியில் அவர் செல்வாராயின் 
இந்த உலகத்து மக்களுக்குப் பொருள்தான் பெரிது. 
அருளை யாரும் கண்டுகொள்வதில்லை. 
(எனக்கு அருள்வார் யாரும் இல்லை) 

கவை முடக் கள்ளிக் காய்
பழம் 


No comments:

Post a Comment